கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர்குப்பம் கிராமத்தில் குளிர்சாதன வசதியுடன் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் 2000 புத்தகங்கள் அடங்கிய வெங்கடலட்சுமி நூலகம் மற்றும் தேச சேவையகம் திறப்பு விழா நடைபெற்றது, வெங்கடலட்சுமி அறக்கட்டளை நிறுவனரும் முன்னாள் ஆடூர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவருமான வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி நூலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
ஆடூர்குப்பம் ஊராட்சி சமூக ஆர்வலர் பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சமூக சேவகி மகாலட்சுமி நிகழ்ச்சியை குற்றுவிளக்கேற்றி தொடங்கி வைத்தார், தொடர்ந்து நூலகம் வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு அனைவரும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேசுகையில் ஆடூர்க்குப்பம் கிராம இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்வதற்கும் அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை எளிதில் பெறவும் மாணவர்கள் ஒரு புத்தகங்களை அதிகம் படிக்க ஊக்குவிக்கும் விதமாக இச்சேவையாகம் தொடங்கப்பட்டுள்ளது, இதனை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் போட்டி தேர்வுகளில் தங்களை தயார் செய்து கொள்ளவும் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து கிராம இளைஞர்கள் தெரிந்து கொள்ளவும் சேவையகத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
இறுதியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. வள்ளலார் உயர்நிலைப் பள்ளி தாளாளர் ஜெயச்சந்திரன், ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் A.V ராஜாராமன், சமூக சேவகர் அரசன், கோடீஸ்வரன், வெங்கடாசலம், சின்னசாமி ஸ்ரீதர் பாலாஜி தேவதாஸ் சிவா ,சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக