குன்னூர் புனித மாண்ட்போர்ட் பள்ளி விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவினை பள்ளியின் தலைமையாசிரியர் விமலா மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரேசா ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர். இவ்விழாவிக்கு புனித வளனார் ஆங்கிலோ இந்தியா பள்ளியின் தலைமையசிரியர் சகோதரி லீமா ஜோஸ்பின் சிறப்பு விருந்தினராக தலைமை ஏற்றார் பள்ளியின் தாளாளர் சகோதரர் டாக்டர் தாமஸ் செல்வம் மற்றும் அருட் சகோதரர்கள் சிறப்பு விருந்தினர்களாக இவ்விழாவிற்கு தலைமை தாங்கினர். இசை வாத்தியங்களுடன் சிறு குழந்தைகள் சிறப்பு விருந்தினரை வரவேற்றனர். தேசிய கொடியை ஏற்றி வைத்து நான்கு அணிகளின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர் ஏற்று கொண்டார். எல்.கே.ஜி முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். அப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினரர். பள்ளி தாளாளர் கேடயத்தை சிறந்த அணிவகுப்பிற்காக கேடயத்தை மாண்ட் போர்ட் அணிக்கும், சிறந்த ஒழுக்கத்திற்கான பரிசுகளை 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கினார். இதில் ஏராளமான முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக