சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பூவாணத்தில் விளையாட்டு திடல் கேட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவித்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தள்ளிவைப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஜூலை, 2025

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பூவாணத்தில் விளையாட்டு திடல் கேட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவித்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தள்ளிவைப்பு


சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பூவாணத்தில் விளையாட்டு திடல் கேட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவித்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தள்ளிவைப்பு


பேராவூரணி , தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பூவாணம் ஊராட்சியில் விளையாட்டு திடல் கேட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவதாஸ் அறிவித்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பூவாணம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தேவதாஸ் தெரிவித்துள்ளது.


பூவாணம் ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலம்  சர்வே எண் 192 ல்  விளையாட்டு திடல் அமைத்து தர கேட்டு தமிழக முதல்வர் , விளையாட்டுத்துறை அமைச்சர்  மற்றும்  அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டு   சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக  அறிவித்தது குறித்து  அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது அறிவிக்கப்பட்ட சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு மக்களை திரட்டி விரைவில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூவாணம் தேவதாஸ் தெரிவித்துள்ளார்.


பேராவூரணி நீலகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad