வார வாரம் கந்துவட்டி கட்ட முடியாமல் வீடியோ வெளியிட்டு ஏரியில் உள்ள மரத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஜூலை, 2025

வார வாரம் கந்துவட்டி கட்ட முடியாமல் வீடியோ வெளியிட்டு ஏரியில் உள்ள மரத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

வார வாரம் கந்துவட்டி கட்ட முடியாமல் வீடியோ வெளியிட்டு ஏரியில் உள்ள மரத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!
குடியாத்தம் , ஜூலை 21 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சரகுப்பம் காசிமாலா பகுதியைச் சேர்ந் தவர் ரஹ்மத்துல்லா இவரது மகன் நஸ்ரு ல்லா (வயது 36) இவருக்கு ஆரிபா என்ற மனைவியும் இரண்டு மகள்கள்உள்ளனர்
நஸ்ருல்லா மரக்கடையில் கூலி வேலை செய்து வந்துள்ளார் இந்நிலையில் நஸ்ரு ல்லா குடும்பத் தேவைக்காக செம்பேடு பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மற்றும் சிட்டா என்ற அஜிம் என்பவரிடம் கடன் பெற்றுள்ளார். வாரம் வாரம் கந்துவட்டி கட்ட முடியாமல்   நஸ்ருல்லா மன உளைச் சலில் இருந்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில் சாமிநாதன்  மற்றும் சிட்டா என்கின்ற அஜீம் இருவரும் வட்டி கட்ட சொல்லி அவரை வற்புறுத்தியதாக கூறப்படுகிறதுதொடர்ந்து மூன்று நான்கு வருடங்களாக வட்டி மட்டும் கொடுத்து வருவதாக கூறுகின்றார் இதனால் என் வாழ்க்கையே நாசமாக போய்விட்டது என்று சொல்கின்றார் இதனால் அவர் தன்னுடைய மனைவி மட்டும் பிள்ளைக ளோடு சந்தோஷமாக வாழஇயலவில்லை என்றும் கூறுகின்றார் மேலும் சாமிநாதன் மற்றும் அசிமுக்கு கந்துவட்டி பணம் கொ டுக்க உறவினர்கள் நிறைய பேரிடம் கடன் பெற்று கந்து வட்டிக்காரர்களுக்கு கொடுத்துள்ளார் இந்நிலையில் நேற்று மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டு வருவதாக சென்ற நஸ்ருல்லா செட்டிகுப்பம் ஏரியில் எனது தற்கொலை க்கு காரணம் இரண்டு பேர் தான் அவர் களுக்கு நான் வட்டி கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகிறேன் என்று வீடியோ வெளியிட்டு ஏரியில் உள்ள வேப்ப மரத் தில் தூக்கிட்டு  தற்கொலை செய்துள் ளார் அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இதனைக் கண்டு கிராம மக்களிடம் தெரிவித்தனர் கிராம மக்கள் விரைந்து வந்து பார்த்தபோது நஸ்ருல்லா தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டதை கண்டு உடனடியாக குடியா த்தம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து சென்று நஸ்ருல்லாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக் கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் குடியாத்தம் தாலுகா போலீசார் நஸ்ருல்லா தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வாரம் வாரம் வட்டி கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்த கூலி தொழிலாளி வீடியோ வெளியிட்டு தூக்கி ட்டு தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் கிராம மக்களிடையே பெரும் சோக த்தை ஏற்படுத்தி உள்ளது.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad