முன்விரோத காரணமாக கட்டிடம் மேஸ் திரி கத்தியால் வெட்டிய கும்பல் போலீ சார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஜூலை, 2025

முன்விரோத காரணமாக கட்டிடம் மேஸ் திரி கத்தியால் வெட்டிய கும்பல் போலீ சார் விசாரணை !

முன்விரோத காரணமாக கட்டிடம் மேஸ்திரி கத்தியால் வெட்டிய கும்பல் போலீசார் விசாரணை !
குடியாத்தம் , ஜுலை 21-

குடியாத்தம் அருகே விளையாட்டு மைதா னத்தில் முன் விரோதம் காரணமாக கட்டிட மேஸ்திரியை கத்தியால் வெட்டிய கும்பல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்- குடியாத்தம் போலீசார் விசாரணை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த வல்லரசு  (வயது 26) இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை  செய்து வருகிறார் இதே பகுதி யை சேர்ந்த அவரது உறவினர் பைரவன் (வயது 45)என்பவருக்கும் வல்லரசு குடும் பத்தாருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று இரவு செட்டிகுப்பம் அருகே உள்ள விளையாட்டு மைதான த்தில் வல்லரசு தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார் அப்பொழுது பைரவன் மற்றும் அவருடன் வந்த கும்பல் வல்லரசு டன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் 
பைரவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வல்லரசுவின் கையில்பலமாக வெட்டியுள்ளார் இதனையடுத்து படுகா யம் அடைந்த வல்லரசுவை அங்கிருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில் அங்கு தற்போது வல்லர சுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத் தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad