முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை வழங்கும் நேதாஜி மைதானத்தில் அமைச்சர்கள் ஆய்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஜூலை, 2025

முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை வழங்கும் நேதாஜி மைதானத்தில் அமைச்சர்கள் ஆய்வு


திருப்பூர்  மாவட்டம், உடுமலைப்பேட்டை நேதாஜி மைதானத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டபணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சிக்கான  நிகழ்விடத்தினை நேரில் பார்வையிட்டோம். உடன் மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர்  மு.பெ. சாமிநாதன் அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4 ம் மண்டலக்குழுத் தலைவருமான  இல. பத்மநாபன் அவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், இந்நாள்-முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள்  உடனிருந்தனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad