நவதிருப்பதி - திருப்புளிங்குடி காய்சினவேந்தன் ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஜூலை, 2025

நவதிருப்பதி - திருப்புளிங்குடி காய்சினவேந்தன் ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம்.

திருப்புளிங்குடி காய்சினவேந்தன் ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம். 

ஸ்ரீவைகுண்டம் ஜூலை 14. நவதிருப்பதி களில் மூன்றாவது ஆன திருப்புளிங்குடி கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஜூலை 10 ந்தேதி தொடங்கி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வந்து, யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது. 

இன்று காலை 3 மணிக்கு விஸ்வரூபம். யாகசாலை பூஜை சர்வசாதகம் கோவிந்தன் பட்டாச்சாரியா ர் மற்றும் தல அர்ச்சகர் கோபாலகிருஷ்ணன் செய்து இருந்தனர். நாலாயிர திவ்யப்பிரபந்தம், வேதங்கள் நடந்தது. 5.00:மணி அளவில் பூர்ணாகுதி நடந்து 5.30 மணிக்கு கும்பங்கள் புறப்பட்டு சென்றது. விமானம், மற்றும் மூலஸ்தானத்தில் 6.10 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 

இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். தேவராஜன். கண்ணன். ஸ்ரீவேங்கடகிருஷ்ணன். செயல் அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா. உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம். லட்சுமி பேக்கரி முருகன். முத்துகிருஷ்ணன். செந்தில். 

வேணுகோபாலசுவாமி கைங்கர்ய அறக்கட்டளை 
(டி வி எஸ்) உதவி மேலாளர் வரதராஜன். கள இயக்குனர் விஜயகுமார்.பொறியாளர் சுப்பு. ஆலோசகர் ராமசாமி. தல பொறியாளர் கார்த்தி. களப் பணியாளர்கள் பாலாஜி. பத்மநாபன்.. பிரகாஷ். திருவேங்கடத்தான் தாசில்தார் சிவசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad