நெகிழியை தவிர்ப்போம் மஞ்சப்பையை பயன்படுத்துவோம். போதை இல்லா தமிழகம் படைப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஜூலை, 2025

நெகிழியை தவிர்ப்போம் மஞ்சப்பையை பயன்படுத்துவோம். போதை இல்லா தமிழகம் படைப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி


திருப்பூர் மாவட்டம் உடுமலை ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட குழு துங்காவி ஊராட்சி மன்றம் இணைந்து 

நாட்டு நலப்பணி திட்ட குழு மாணவியர் நெகிழி பையின் தீமைகள் மஞ்சப்பையின் பயன்பாட்டு நன்மைகள், மதுவின் தீமைகள் போதை பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு பேரணி துங்காவி ஊராட்சி மன்ற வளாகத்தில் இருந்து   மடத்துக்குளம் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் P.ஆறுமுகம் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் துங்காவி கிராம நிர்வாக அலுவலர் மணிரத்தினம் கணியூர் காவல் துறை உதவி ஆய்வாளர் அவர்கள்   முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்னுத்தாய் தங்கராஜ் துங்காவி கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் மாணவியர் பேரணியை கிராமத்தின் முக்கிய வீதிகளில் சென்று பொதுமக்கள் இடையே பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்நிகழ்வு துங்காவி ஊராட்சி மன்ற செயலாளர் முகமது இஸ்ஹாக் வழிநடத்தினார் மீண்டும் ஊராட்சி மன்ற வளாகத்தில் நிறைவடைந்தது 

இந்நிகழ்வினை ஸ்ரீஜிவிஜி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சே.  மகேஸ்வரி, முனைவர் ஆ.வடிவுக்கரசி. முனைவர் மு.கஜலட்சுமி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad