திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் அனுப்பர்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி மாரியம்மன் கோவில் அருகில் புதிய சாக்கடை பாலம் போடப்பட்டது சாலைக்கும் பாலத்திற்கும் இணைக்க கான்கிரீட் கலவை போடப்பட்டது போடப்பட்டு மூன்றாவது நாளே ஜல்லி கற்கள் பெயர்ந்து வருகின்றது இது குறித்து அந்த பகுதி மக்கள் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை சிமெண்ட் பற்றாக்குறையால் கற்கள் பெயர்ந்து வருகிறது கலவையின் தரம் மிக மோசமாக உள்ளது அதிகாரிகள் இதை கண்காணித்து இந்த வேலை செய்த ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கை செய்து உடனடியாக இதற்கு மேல் சரியான முறையில் சிமெண்ட் கலந்து கலவை போட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும் இதனால் கற்கள் வீதி முழுவதும் உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி சறுக்கி கீழே விழும் நிலை உள்ளது உடனடியாக இது சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இது போன்ற வேறு பகுதிகளில் தார் ரோடு மற்றும் சிமெண்ட் ரோடு போடப்படும் பொழுது அதிகாரிகள் மேற்பார்வையிடுவது இல்லை பல ஆண்டுகளாக இதேபோல் புகார்கள் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மீது பொதுமக்கள் கூறுகின்றனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக