மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற கமலஹாசனுக்கு மானாமதுரை மநீம கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமலஹாசன், திமுகவைச் சேர்ந்த ராஜாத்தி (கவிஞர் சல்மா), எஸ்.ஆர். சிவலிங்கம், பி. வில்சன் ஆகிய 4 பேர் வெள்ளிக்கிழமையன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். பதவியேற்ற உறுப்பினர்கள் அவை துணைத் தலைவர் ஹரிவன்ஷி வாழ்த்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மக்கள் நீதி மய்யம் சார்பாக நகர செயலாளர் கே. பி. மூர்த்தி, நகர துணை செயலாளர் என். பிரபாகரன், ஒன்றிய செயலாளர் அ .சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் ரெங்கநாதன், ஒன்றிய தலைவர் எஸ். குமார் , மீனவ அணி மாவட்ட செயலாளர் பி. துரைப்பாண்டி, விவசாய அணி ஒன்றியம் கே.பாலகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் பி. தனபாண்டியன், சிறுதுளி ரசிகன் சி. எம் .சிவகுமாரன், மாவட்ட பிரதிநிதி அ. மனோகரன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், அவ்வை சரவணன் மற்றும் பி. ரவிக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற மக்கள் நீதி மய்யம் தலைவர், 'நம்மவர்' திரு கமலஹாசன் அவர்களின் பணி சிறக்க மானாமதுரை மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக தங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக