மானாமதுரை அருள்மிகு ஸ்ரீ நிரதலமுடைய அய்யனார் ஸ்ரீ சோனியா சுவாமி கோவிலில் பொங்கல் பூஜை விழா நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஜூலை, 2025

மானாமதுரை அருள்மிகு ஸ்ரீ நிரதலமுடைய அய்யனார் ஸ்ரீ சோனியா சுவாமி கோவிலில் பொங்கல் பூஜை விழா நடைபெற்றது


மானாமதுரை அருள்மிகு ஸ்ரீ நிரதலமுடைய அய்யனார் ஸ்ரீ சோனியா சுவாமி கோவிலில் பொங்கல் பூஜை விழா நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ நிரதலமுடைய அய்யனார் ஸ்ரீ சோனியா சுவாமி கோயிலில் விசுவாவசு வருடம் ஆனி மாதம் 9ஆம் தேதி 3ஆம் ஆண்டு பொங்கல் பூஜை விழா மானாமதுரை சிவகுலத்தோர் சமுதாய உறவின்முறை சார்பாக வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சுவாமிக்கு அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் பூத்தட்டு ஊர்வலம் கோயில் சன்னதி வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் பொங்கல் பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது‌. மேலும் வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீ சோனையா சுவாமி சந்தன காப்பு அலங்காரத்துடனும், மறுநாள் சனிக்கிழமை குதிரை வாகன அலங்காரத்துடனும் காட்சி அளித்தார். விழா நிறைவாக வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு ஸ்ரீ பெரியகருப்பு, ஸ்ரீ சின்ன கருப்பு நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்த கோடி பெருமக்கள், நிர்வாக கமிட்டியாளர்கள், சிவகுலத்தோர் சமுதாய உறவுமுறையினர் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ நிரதலமுடைய அய்யனார் ஸ்ரீ சோனியா சுவாமி அருள் ஆசி பெற்று சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad