கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வனவிலங்குகளால் தொடரும் படுகொலைகள்
பந்தலூர் கொளப்பள்ளி அம்மன்காவு பகுதியில் யானை தாக்கியதில் பெண்மணி உயிரிழப்பு.காலை 6 மணியளவில் தேயிலை தோட்டத்தில் இருந்து வந்த ஒற்றை யானை எதிர்பாராத விதமாக தாக்கியதால் சம்பவ இடத்திலையே உயிரிழப்பு ஏற்பட்டது.இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலும் பரப்பிலும் காணப்படுகின்றனர். தினந்தோறும் வனவிலங்கு தாக்குதலால் கூடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர் இது சம்பந்தமாக வனத்துறை நிர்வாகம் உரிய நிரந்தர தீர்வு வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக