கூடலூர் -பந்தலூர் பகுதியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக உலா வந்ததால் பொதுமக்கள் பீதி
கூடலூர் ஓவேலி பெரியசோலை பகுதியில் யானை கூட்டத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தாலும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து சேதம் ஏற்படுத்துமா என்கிற அச்சத்துடன் உள்ளனர்.
வனத்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
இதே போல் பந்தலூர் அருகே சேரங்கோடு படச்சேரி பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு படச்சேரி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இரவு காட்டு யானைகள் புகுந்து குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தியது.
மேலும், பாக்கு, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களையும் உடைத்து சேதப்படுத்தியது. மக்கள் தகரங்களை தட்டியும், சத்தமிட்டும் யானைகளை விரட்டினர். யானைகள் சிறிது நேரம் அப்பகுதியில் முகாமிட்டு அதன்பின் அங்கிருந்து நகர்ந்து சென்றது. காட்டு யானைகள் நடமாட்டத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக