சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தமிழக அரசின் நிறுவனமான டான்செம் அமைப்பின், அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான குலோபல் மிஷன் மருத்துவமனை சார்பில் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், கலை மற்றும் அறிவியல், நர்சிங் கல்லூரிகளில் பயின்ற மாணாக்கர்களுக்கான வேலைவாயப்ப்பு முகாம் நடந்தது.
தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் டான்செம் நிறுவனம், உலகளாவிய வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது. 12000த்திற்க்கும் மேற்பட உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உரிய வேலைவாய்ப்புகளை கண்டறிந்து, அவர்களுக்கு அந்த வேலை சார்ந்த பயிற்சிகளை அளித்து, மாணாக்கர்களை வேலையில் அமர்த்தும் பணியினை டான்செம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் பயின்ற ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் மற்றும் கலைக்கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்றது.
இவ்வேலைவாய்ப்பு முகாம் குளோபல் மிஷின் மருத்துவமனை வளாகம்,கோவிலுார் சாலை, காரைக்குடில்- காலை 8.30 மணியளவில் துவங்கியது. இம்முகாமில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் முன்னணி நிறுவனத்தின் சார்பில் நேர்காணல்களும் நடத்தப்பட்டது, இதில் சுமார் 1000 மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
நேர்முக தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் வேலைவாய்ப்புக்கான ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியை குளோபல் மிஷின் மருத்துவமனையின் சேர்மன் மருத்துவர் குமரேசன் வரவேற்றார் . நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, காரைக்கு MLA மாங்குடி,டாம்சன் நிறுவன CEO சாவாஸ், காரைக்குடி தாசில்தார், மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். நிகழச்சி ஒருங்கிணைப்பு மருத்துவமனையின் துணை இயக்குனர் விவேகானந்தன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக