மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் பரசலூரில் மக்கள் மசோதா கட்சி தலைமை அலுவலகம் உள்ளது மக்கள் மசோதா கட்சி கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு நாள்தோறும் உறுப்பினர்கள் இணைந்து வருகின்றன தற்போது ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது செம்பனார்கோவில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் மக்கள் மசோதா கட்சியின் நிறுவனர் டாக்டர் மாயா வெங்கடேசன் தலைமையில் அக்கட்சியில் இணைந்தனர்.
அப்பொழுது கட்சியின் நிறுவனர் டாக்டர் மாயா வெங்கடேசன் சிறப்புரை ஆற்றினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இதில் கடந்த பல ஆண்டுகளாக தான் வீரபாண்டிய கட்டபொம்மன் பொதுநல மன்றம் என துவங்கி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்ததாகவும் குறிப்பாக இலவச ஆம்புலன்ஸ் வசதி, பிரீசர் பாக்ஸ், ஆயிரக்கணக்கானோருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்த போது தனக்கு அரசியல்வாதிகள் சிலர் இடையூறுகள் ஏற்படுத்தியதாகவும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதற்கு தடை ஏற்படுத்தியதாகவும் இதன் காரணமாகவே மக்களின் ஆதரவோடு மக்கள் சக்தியோடு அதிகாரத்தோடு மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி ஆரம்பிக்கப்பட்டதாகவும் சில மாதங்களிலேயே லட்சக்கணக்கான உறுப்பினர்கள் இணைந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்பொழுது 2026 சட்டமன்றத் தேர்தலில் குறிப்பாக இந்த பூம்புகார் தொகுதியில் தங்கள் கட்சி கைகாட்டும் நபரே சட்டமன்ற உறுப்பினர் ஆக முடியும் எனவும் அவர் மக்களுக்கு உண்மையாக நேர்மையாக பணியாற்ற வேண்டும் எனவும் அப்படி இல்லை என்றால் தாங்கள் செய்ய வைப்போம் எனவும் தெரிவித்தார். தங்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அதை முழுமையாக நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்தார்.
விழாவில் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் பொதுச் செயலாளர் RKV.ரூபன் மாநில ஒருங்கிணைப்பாளர் P.பிரகாஷ் மாநில கொள்கை பரப்பு செயலாளர்,மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் ஆறுபாதி. A.S. சபரிநாத், தஞ்சை மண்டல செயலாளர் ஜோதிபாஸ், மாவட்ட பொருளாளர் முரளி, செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் பூக்கடை சதீஷ், செம்பை ஒன்றிய இளைஞரணி செயலாளர் பகத்சிங் திருச்செம்பள்ளி ஊராட்சி செயலாளர் ஸ்டாலின், ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக கட்சியின் நிறுவனர் டாக்டர் மாயா வெங்கடேசனுக்கு கட்சி சார்பில் சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்கும் அளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக