சேதுபாவாசத்திரம் அருகே திமுக பொதுக்கூட்டம், ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியம் திமுக இளைஞர் அணி சார்பில், டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா, நாடு போற்றும் திராவிட மாடல் அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம், சேதுபாவாசத்திரம் அருகே கொள்ளுக்காடு கடைவீதியில் நடைபெற்றது.
திமுக சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வை.மதன் வரவேற்றார். தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் தி.பழனிவேல், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், தொகுதி பார்வையாளர் சுப.சரவணன், பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் இரா.இராஜரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். திமுக தலைமை கழக பேச்சாளர் ந. மணிமுத்து, இளம் பேச்சாளர் இரா.செ.கபில் சாய் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பொதுக்குழு உறுப்பினர் தனபால், மாவட்ட கழக நிர்வாகிகள் எஸ். ஞானப்பிரகாசம் சி. விஜயகுமார் எம் கே எஸ் ஹபீப் முஹம்மது இளைஞர் அணி நிர்வாகிகள் ஆதி.ராஜேஷ்வரன், பிரவீன் ஆனந்தன், அரவிந்தன் மற்றும் சார்பு அணி, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உறுப்பினர் சேர்க்கை முன்னதாக, 'ஓரணியில் தமிழ்நாடு' திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி ரெண்டாம்புலிக்காடு, மல்லிப்பட்டினம், ராமர்கோவில் ஆகிய இடங்களில் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. திமுக தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தி.பழனிவேல், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தனர்.
பேராவூரணி நீலகண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக