வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஜூலை, 2025

வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!!

வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!!
வேலூர் , ஜுலை 23 -

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி, மண்டலம் 2, சத்துவாச்சாரி டபுள் ரோடு பாலாஜி மஹாலில் நடைபெற்ற "உங்களு டன் ஸ்டாலின்" திட்ட  முகாமில் மின் இணைப்பு பெயர் மாற்றம் வேண்டி மனு அளித்த பயனாளிக்கு உடனடியாக பெயர் மாற்ற ஆணையினை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு இந்த ஆணையினை வழங்கினார். இந்த நிகழ்வின்போது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் இலட்சுமணன், மக்கள் பிரதிநிதிகள், சத்துவாச்சாரி டபுள் ரோடு கவுன்சிலர் சீனிவாசன், ரமேஷ் வேலூர்  இணை ஆணையர் சதிஷ், சுகாதார அலுவலகம் சிவக்குமார், அனைத்து துறைகள் சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று பதிவேற்றம் செய்து குறைகளின் பெயரில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad