விட்டிலாபுரம் பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஜூலை, 2025

விட்டிலாபுரம் பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகம்.

விட்டிலாபுரம் பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகம். 

செய்துங்கநல்லூர் ஜூலை 5 தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரம் பாண்டுரங்கன் கோவில் உள்ளது. இதனை தெஷண பண்டரிபுரம் என்றும் சொல்வார்கள். 2009 க்குப் பின்னர் 16 ஆண்டுகள் கழித்து தற்போது திருப்பணிகள் நடந்து 7-7-25 திங்கள் கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 

அதனை முன்னிட்டு நேற்று தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. 7 யாக குண்டம் அமைக்கப்பட்டுள்ளது இன்று காலை முதல் 5 காலம் ஓமகுண்ட யாகசாலை பூஜை நடைபெறும். காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 10.35 மணிக்கு யாகச பூஜை நடந்தது. 12 30 மணிக்கு பூர்ணாகுதி. நாலாயிர திவ்யப்பிரபந்தம், வேதபாராயணம் நடந்தது. பின்னர் தீர்த்தம். பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் இரவிலும் நடைபெறுகிறது. 

இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் தலைவர் கோமதி ஜானகிராமன். செயல் அலுவலர் கோவல மணிகண்டன். ஆய்வாளர் நம்பி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜூலை 7 ந்தேதி காலை 9.15 மணிக்கு மேல் 10.15 க்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad