குடியாத்தத்தில்உலக அமைதி மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி- 500க்கும் மேற்பட்ட ஜெயின் சமுதாய மக்கள் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஜூலை, 2025

குடியாத்தத்தில்உலக அமைதி மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி- 500க்கும் மேற்பட்ட ஜெயின் சமுதாய மக்கள் பங்கேற்பு!

குடியாத்தத்தில்உலக அமைதி மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி- 500க்கும் மேற்பட்ட ஜெயின் சமுதாய மக்கள் பங்கேற்பு!
குடியாத்தம் , ஜூலை 5 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம்  சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் மற்றும் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் பேரணி யை துவக்கி வைத்தனர் வேலூர் மாவட் டம் குடியாத்தம் ஜெயின் தேராபந்த் சங்க த்தின் சார்பாக உலக அமைதி மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது முன்னதாக குடியா த்தம் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்து தொடங்கிய பேரணியை குடியா த்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜ யன் மற்றும் குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்து ஊர் வலத்தில் பங்கேற்றனர் குடியாத்தம் பழைய  பேருந்து நிலையம் காமராஜர் பாலம்  மற்றும் சந்தப்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளின் வழியாக இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது 
மேலும் பேரணியில் போதை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய வாறு உலக அமைதி வேண்டும் போதை விழிப்புணர்வு குறித்த கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் சென்றனர்
மேலும் இதில் 500க்கும் மேற்பட்ட ஜெ யின் சமுதாய மக்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad