வேலூர் மாவட்டம் அகரம் சேரி ஊராட் சியில் மரக்கன்றுகள் நடவு நிகழ்ச்சி!
குடியாத்தம் , ஜுலை 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், அகரம்சேரி ஊராட்சியில் 1 கி.மீ நீளத்திற்கு பாலாற்றங்கரையில் 2000 மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.07.2025) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வ நாதன், குடியாத்தம் வருவாய் கோட்டாட் சியர் செல்வி சுபலட்சுமி, உதவி இயக்கு நர் (ஊராட்சிகள்) .திருமால், மாதனூர் ஒன்றியக்குழுத்தலைவர் பா ச.சுரேஷ் குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆனந்தி நித்யானந்தம், அகரம்சேரி ஊராட்சி மன்ற தலைவர் வச்சலா ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், சமூக ஆர்வலர் ஸ்ரீகாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக