சிறுமுகை மசில் மேன் ஜிம் சார்பில் கோவை மாவட்ட ஆணழகன் போட்டி நடந்தது..
கோவை மாவட்டம் சிறுமுகை மசில் மேன் ஜிம் சார்பில் கோவை மாவட்ட ஆணழகன் போட்டி சிறுமுகை மகாலட்சுமி மகாலில் நடைபெற்றது. இரண்டாவது முறையாக நடைபெறும் இப் போட்டியில் கோவை மாவட்டத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் 55 கிலோ 60 கிலோ 65 கிலோ 70 கிலோ 75 கிலோ 80 கிலோ 85 கிலோ மேல என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. சிறுமுகை மசில்மேன் ஜிம் மாஸ்டர் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்ற பிரதீப் வரவேற்று பேசினார் .நடுவர்களாக தமிழ் ஹிட் ஃபிட்னஸ் அசோசியேசன் நிர்வாகிகள் அப்துல் ரஹீம், பிரபு, நிஷாத் ,தமிழ்ச்செல்வ,ன் நித்தியா, ஆகியோர் பங்கேற்று போட்டிகளை நடத்தினர் .இறுதியில் நடைபெற்ற சாம்பியன் ஆப் சாம்பியன் (கோவை மாவட்ட ஆணழகன்)ராகுல் தேர்வு பெற்றார். சௌந்தரபாண்டி இரண்டாம் இடம் பெற்றார். அவர்களுக்கு பட்டம் தங்கம் மற்றும் வெள்ளி கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக