சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் அமைப்பும், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியும், இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு 2025 அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 26.07.2025 அன்று நடைபெற்றது.
அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இக்கருத்தரங்கில் வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் நிலோபர்பேகம் தலைமை வகித்தார். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சொக்கநாதன் வரவேற்றார்.
அழகப்பா பல்கலைக் கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜோதிபாசு, மற்றும் திருச்சி ராமன் ஆய்வு அறக்கட்டளை தலைவர் ரவிச்சந்திரன், கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்திரமோகன், இயற்பியல் துறைத் தலைவர் கவிதா, பேராசிரியர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட 18 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் தங்களது படைப்புகளை சமர்பித்தனர். இந்நிகழ்விற்கு TASS மாநில மேற்பார்வையாளர் உதயன், மாவட்டக்குழு சார்பாக முத்துக்குமார் சதீஷ்குமார், ஆனந்தி, சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பேராசிரியர்கள் மகேஷ்வரி, பிரபாவதி மற்றும் தமீமா ஆகியோர் படைப்புகளை மதிப்பீடு செய்தனர். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் அடுத்த மாதம் சிவகாசியில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஏராளமான ஆய்வாளர்களும், மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர். செல்லப்பாண்டியன் நன்றி கூறினர். கணேஸ்வரி கிருஷ்ணவேணி மற்றும் ரூபினா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக