காட்பாடி ரெட்கிராஸ் செயலாளரின் தாயார் மறைந்த தலைமையாசிரியை பச்சையம்மாள் கண்கள் தானம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஜூலை, 2025

காட்பாடி ரெட்கிராஸ் செயலாளரின் தாயார் மறைந்த தலைமையாசிரியை பச்சையம்மாள் கண்கள் தானம்!

காட்பாடி ரெட்கிராஸ் செயலாளரின் தாயார் மறைந்த தலைமையாசிரியை பச்சையம்மாள் கண்கள் தானம்!

வேலூர் மாவட்டம் காட்பாடி ரெட்கிராஸ் செயலாளரின் தாயார் மறைந்த தலை மையாசிரியை பச்சையம்மாள் கண்கள் தானம்! ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மறைந்த சி.பச்சையம்மாள் கண்கள் தான மாக வழங்கப்பட்டது.  ரெட்கிராஸ் நிர்வா கிகள், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்கள், முதன்மைக்கல்வி அலுவ லர், தலைமையாசிரியர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை செயலாளரும், ஜுனியர் ரெட்கிராஸ் வேலூர் மாவட்ட துணைத்தலைவர், காட்பாடி கிளித்தான்பட்டரை கல்வி உலகம் அரசு நிதிஉதவி உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான எஸ்.எஸ்.சிவவடிவு அவர்களின் தாயார் மற்றும் காட்பாடி ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவரும் ஓய்வு பெற்ற முதன் மை கல்வி அலுவலருமான மறைந்த டி.வி.சிவசுப்பிரமணியம் அவர்களின்
 மனைவி  சி.பச்சையம்மாள் அவர்கள் (வயது 79) இன்று 26.07.2025 அதிகாலை 4.35 மணி அளவில் வேலூர் நறுவி மருத் துவமனையில் காலமானார்.  வேலூர் வடக்கு ரோட்டரி சங்கம் மற்றும் காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் வழிகாட்டுதல் பேரில் அன்னாரின் இரண்டு கண்கள் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.அன்னாரின் உடலுக்கு காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக் குநர்கள் வை.குமார், ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொ) சு.தயாளன், இராணிப்பேட்டை மாவட்டக்கல்வி அலுவலர் கோ.பழனி, திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர் சத்யபிரபா, வேலூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை, காட்பாடி ரெட்கிராஸ் அவை துணைத் தலைவர் ஆர்.விஜயகுமாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி, டாக்டர் வீ.தீன பந்து, எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், ஆறு முகம், எ.ஆனந்தகுமார், உள்ளிட்டோரும்,  ஓய்வுபெற்ற வேலூர் மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.மகாலிங்கம், தலைமை யாசிரியர்கள் ஜெயதேவரெட்டி, கே.உமா பதி, டி.மோகனவேலு, எஸ்.கலைச் செல் வன், ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட பொரு ளாளர் க.குணசேகரன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள், ரோட் டரி சங்க நிர்வாகிகள், உறவினர்கள் நண் பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நே ரில் அஞ்சலி செலுத்தினர் அன்னாரின் இறுதி சடங்குகள்  ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் பாலாஜி தியே ட்டர் ஆஸ்கார் தியேட்டர் பின்புறம் உள்ள பாலாஜி நகர் மூன்றாவது தெருவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது வேலூர் அகர்வால் கண் மருத்துவமனையின் கண் வங்கி மேலாளர் சஞ்சீவி அவர்களிடம் இரண்டு கண்களையும் காட்பாடி ரெட்கிராஸ் செய லாளர் எஸ்.எஸ்.சிவவடிவு தானமாக வழங்கினார். அப்போது அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad