புகழ்பெற்ற இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் தேவாலய அலங்கார தேர் பவனி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற திருஇருதய ஆண்டவர் திருத்தலத்தில் வருடாவருடம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழாவானது கடந்த 27ஆம் தேதியன்று சிவகங்கை மறை மாவட்ட ஆயர் திரு அருள் ஜோசப் அவர்களின் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகிற நான்காம் தேதி வெள்ளிக்கிழமையன்று மாலை மின் அலங்கார தேர் பவனி நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை திருத்தல தேவாலய பணியாளர் ஜான் வசந்த், திருச்சபை சகோதரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர். நடைபெற உள்ள இந்த தேர் பவணியில் இடைக்காட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இறை மக்கள் கலந்து கொள்ளுமாறு இடைக்காட்டூர் திருவிழா ஆண்டவர் திருத்தல நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக