இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முதல் இராமநாதபுரம் வரையில் 37.7 கிலோமீட்டர் தூரம் இருவழி சாலையாக உள்ள தேசிய நெடுச்சாலை தற்போது 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு ரூபாய் 1.853 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த ரூபாய் 350 கோடி ஒதுக்கப்படும் எனவும் தெரியப்படுத்தப்பட்டது
இந்த நான்கு வழிச்சாலை திட்டம் நடைமுறைக்கு வந்தால் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையில் போக்குவரத்து சீராகவும் விபத்துக்கள் குறையவும் வாய்புள்ளது. மேலும் ராமநாதபுரம் ராமேஸ்வரம் மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் வர்த்தக வளர்ச்சி பெறவும் பொருளாதாரம் பெருகவும் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக