சாலை ஓரம் உள்ள கடைகளின் விளம்பர பலகையை அகற்ற ஆலோச னை கூட்டம்!போக்குவரத்து போலீசார் நடவடிக்கை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஜூலை, 2025

சாலை ஓரம் உள்ள கடைகளின் விளம்பர பலகையை அகற்ற ஆலோச னை கூட்டம்!போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

 சாலை ஓரம் கடைகளில் விளம்பர பலகையை அகற்ற ஆலோச னை கூட்டம்!போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!


குடியாத்தம், ஜூலை 26-

குடியாத்தம் நகரத்தின் சாலையின் இரு புறம் உள்ள கடைகளில்  போக்குவரத்து
நெரிசல் நெரிச்சல் உள்ளது இதனால் சாலையின் செல்லும் வாகனங்கள் ஒது ங்க இடமில்லாமல் , போக்குவரத்து நெரி சல் மற்றும் வாகன ஓட்டிகளுக்குஇடையே தகராறு ஏற்படுகிறது இதனால் சாலை யோரம் வைக்கப்பட்டுள்ள கடை விளம்ப ரம் பலகைகளை அகற்ற வேலூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனன் உத்தரவிட்டார்.
இதற்கு முன்னதாக கடை உரிமையாள ர்கள், வியாபாரி சங்க நிர்வாகிகளுக்கு  போர்டுகளை அகற்றுவதுகுறித்து ஆலோ சனை கூட்டம் குடியாத்தம் அடுத்த காந்தி நகரில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது இதற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் குமார் தலைமை தாங்கினார்
டவுன் சப் இன்ஸ்பெக்டர் வீராசாமி முன் னிலை வகித்தார்.குடியாத்தம் போக்குவர த்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாமி கண்ணு வரவேற்றார் இக்கூட்டத்தில் உரிமையாளர்கள் சசிகுமார் அர்ச்சனா நவீன் வெங்கடகிருஷ்ணன் பிரபு குமார் சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு வியாபாரி சங்க நிர்வாகிகள் பங்கேற்று கடைக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை யை அகற்ற ஒத்துழைப்பு தருவதாக போலீசாரிடம் தெரிவித்தனர் நிகழ்ச்சி இறுதியில் போலீஸ் நிலைய எழுத்தர் கவிதா நன்றி தெரிவித்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad