திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் அனைத்து வார்டுகளிலும் சேகரிக்கும் குப்பையை கொட்டுவதற்கு என்று தனியாக கிடங்கு வசதி பற்றாக்குறையாக இருக்கின்றது மேலும் தினசரி சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து குப்பைகள் கையாளப்படும் பொழுது குப்பைகள் குறைவாக இருந்ததால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருந்தது தற்போது குப்பைகளை தரம் பிரிப்பது இல்லை ஒட்டுமொத்தமாக அந்தந்த வார்டுகளில் ஒவ்வொரு பக்கமாக குவித்து பிறகு பாறை குழிகளில் இந்த குப்பைகளை கொண்டு போய் கொட்டும் பொழுது அந்தப் பகுதி பொதுமக்கள் பாதிப்படைந்து போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்
தற்போது திருப்பூர் நெருப்பெரிச்சல் மாநகர் பத்திர பதிவுத்துறை அலுவலகம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சியால் குப்பை கிடங்கு உருவாக்கப்பட்டு வருகிறது இதை கண்டித்து நெருப்பெரிச்சல் பகுதியில் பொதுமக்கள் கடை அடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது காவல்துறை இந்த பகுதியில் குவிக்கப்பட்டனர் பின்னர் சாலை மறியல் செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக