மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு மன நல ஆலோசனை முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஜூலை, 2025

மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு மன நல ஆலோசனை முகாம்

 

மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு மன நல ஆலோசனை முகாம் இன்று நடைபெற்றது. கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் ஆல் தி சில்ரன் ஆகியன இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் பவித்திரா பேசும்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு. தொடர் கண்காணிப்பு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் முறையாக எடுத்துக்கொண்டால் சிரமம் இன்றி பிரசவம் நடைபெற ஏதுவாக அமையும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தான் இதுபோன்ற ஆலோசனை முகாம்கள் கர்ப்ப கால பராமரிப்பு குறித்து வழிகாட்டல்கள் வழங்கப்படுகிறது என்றார்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது கர்ப்பிணிகள் எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். இதன்மூலம் கருவில் உள்ள குழந்தையின் மன நலனும் ஆரோக்கியமாக இருக்கும். மனதிற்கு பிடித்த இசை பாடல்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள், கதைகள் வாசித்தல், வீடுகளில் பூஞ்செடிகள் வளர்த்தல், கீரை போன்ற வீட்டு தோட்டம், உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். எளிய உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம். 


சத்தான உணவுகளான கீரைகள், பருப்பு பயறு வகைகள், அனைத்து வகை காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அயோடின் கலந்த அரசு உப்பினை எடுத்து கொள்வதால் குழந்தையின் வளர்ச்சி சரியாக முறையில் அமையும் என்றார்.


ஆல் தி சிலரன் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பின்னரும் மன நலன் மற்றும் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். தேவையற்ற கற்பனைகளை தவிர்த்து,  குழப்பங்கள் கவலைகளை மறந்து குழந்தையின் மீதான அக்கறை மட்டும் காட்டி கொள்ள வேண்டும். உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களுக்கு செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசர்களை சந்தித்து ஆலோசனை பெறலாம் என்றார்.


நிகழ்ச்சி சுகாதார செவிலியர் செல்வி, நுகர்வோர் அமைப்பு பிரதிநிதி தேவஞானம் மற்றும் செவிலியர்கள் ஆசா பணியாளர்கள் மற்றும் பல்வேறு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad