பேராவூரணி பகுதி அரசுப் பள்ளிகளின் விடுதிகளுக்கு மாணவ, மாணவிகள் தேர்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஜூலை, 2025

பேராவூரணி பகுதி அரசுப் பள்ளிகளின் விடுதிகளுக்கு மாணவ, மாணவிகள் தேர்வு


பேராவூரணி பகுதி அரசுப் பள்ளிகளின் விடுதிகளுக்கு மாணவ, மாணவிகள் தேர்வு 


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த, பேராவூரணி தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளின் விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு, தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. 


இதில், பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், சமூக ஆர்வலர்கள், கமிட்டி உறுப்பினர்கள், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த 10 விடுதிகளின் காப்பாளர், காப்பாளினிகள் கவிதா, கலைச்செல்வி, மைதீன், யோகேஸ்வரன், ஆனந்தன், ராமன், ஸ்டீபன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


இதில் மாணவ, மாணவியர் விடுதிக்கு விண்ணப்பித்தவர்களில் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 


பேராவூரணி த.நீலகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad