சிவகங்கை மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பாக அழகப்பா அரசு கலைக்கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்க அமைப்பிற்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பாக பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கு நடத்தப்பட்டது. இப்பயிலரங்கில் கொரோனா காலத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து சிறப்பாகச் செயலாற்றிய அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க அமைப்பிற்குச் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட இளைஞர் செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் மேனாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சித்ரா நினைவாக அழகப்பா அரசு கலைக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட இந்த விருதை கல்லூரியின் சார்பாக இளைஞர் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலர் முனைவர் பாரதிராணி பெற்றுக் கொண்டார். இவ்விருதுக்குக் காரணமாக இருந்த அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் மேனாள் இளைஞர் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலர் முனைவர் வேலாயுத ராஜா மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலர் முனைவர் பாரதி ராணி மற்றும் மாணவ மாணவியரை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி பாராட்டி வாழ்த்தினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக