அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துமனையில் 10,000 லிட்டர் கொள் ளளவு கொண்ட திரவ மருத்துவ ஆக்சி ஜன் உருளை!
வேலூர் , ஆகஸ்ட் 2 -
வேலூர் மாவட்டம் பெட்லேண்ட் அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்து மனையில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் உருளை பொருத்தப்பட்டுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி. இ.ஆ.ப. அவர்கள் இன்று (01.08.2025) பார்வையிட்டு ஆய்வு செய் தார். இந்த ஆய்வின்போது அடுக்கம் பாறை அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவ கண் காணிப்பாளர் மரு.ரதிதிலகம். அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மயக்கவியல் பிரிவு தலைவர் மரு.கோமதி. குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் மரு. எழிலரசன். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.சுடலைமுத்து உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக