தமிழ் தாய் வாழ்த்து பாடல் இன்றி துவங்கிய தனியார் பள்ளி ஆண்டு விழா - - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 ஆகஸ்ட், 2025

தமிழ் தாய் வாழ்த்து பாடல் இன்றி துவங்கிய தனியார் பள்ளி ஆண்டு விழா -

 


திருமங்கலத்தில் காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் இன்றி துவங்கிய தனியார் பள்ளி ஆண்டு விழா -  பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பால், விழா நடுவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைக்க செய்ததால் பரபரப்பு.



மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில்,  29 - ஆம் ஆண்டு விளையாட்டுவிழா இன்று காலை துவங்கிய நிலையில்,  பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள் காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்ட நிலையில், விழா தொடங்குவதற்கு முன்பே தமிழ் தாய் வாழ்த்து பாடலை இசைக்க செய்யாமல் விழா தொடங்கியது. விழா தொடங்கிய ஒரு மணி நேரத்திற்கு பிறகு,  இதனை அறிந்த பார்வையாளர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் அவ்வளாகத்திற்கு வந்து கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து கேட்டதற்கு பதில் கூற மறுத்தார்.

       

இதனை தொடர்ந்து, காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, தமிழ் தாய் வாழ்த்து பாடல் விழாவின் நடுவே இசைக்கச் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கல்விச்சாலையிலேயே தமிழ் தாய் வாழ்த்து பாடலின்றி விழா நடத்திய  பள்ளி நிர்வாகம் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad