கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் வசிப்பவர் மாரிமுத்து மனைவி பேச்சியம்மாள். நேற்று இவரது 4 மாத பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த போது தாய்ப்பால் புரையேறி மூக்கு வழியாக வெளியேறி குழந்தை மயக்கமடைந்தது.
உடனே, கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இத்சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக