தென்னை மரத்தை தொழிலாளர்கள் வெட்டு போது மின்கம்பம் சாய்ந்து 5 வயது சிறுமி மற்றும், நாய் பலி!
குடியாத்தம் ஆக . 28
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் குமரன் - ஜானகி தம்பியத்தியிரின் 3 வது மகள் நவியா (வயது 5) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில் நேற்று அவரது வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத் தை தொழிலாளர்கள் அடியோடு வெட்டி உள்ளனர். அப்பொழுது தென்னை மரம் சாய்ந்து , அருகில் இருந்த மின் கம்பத் தின் மீது விழுந்துள்ளது.பின்னர் மின் கம்பத்தில் கீழே விழுந்தது. அதிலிருந்து மின் கம்பிகளும் கீழே அருந்து விழுந்தது.
அப்பொழுது அங்கு அங்கு விளையாடிக் கொண்டு இருந்த சிறுமி நவியா மீது மின் கம்பி விழுந்ததில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குடியா த்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் நவியா இறந்துவிட்டதாக கூறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்ட னர்.இது குறித்த தகவல் அறிந்த குடியா த்தம் டவுன் போலீஸ் சார் சம்பவ இடத்தி ற்கு சென்று பார்வையிட்டு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பின்னர் மின்துறை ஊழியர்கள் அங்கி ருந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தினர்
மேலும் மின்கம்பம் சாய்ந்ததில் அங்கு இருந்த தெரு நாய் ஒன்றும் மின்சாரம் தாக்கி பலியானது.மேலும் இது குறித்து குடியாத்தம் வருவாய்த்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக