காயாமொழியில் உள்ள முப்புராதி அம்மன் கோயிலில் ஆடி கொடை விழா..6ம் ஆண்டாக அன்னதானம் வழங்கல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 ஆகஸ்ட், 2025

காயாமொழியில் உள்ள முப்புராதி அம்மன் கோயிலில் ஆடி கொடை விழா..6ம் ஆண்டாக அன்னதானம் வழங்கல்.

காயாமொழியில் உள்ள முப்புராதி அம்மன் கோயிலில் ஆடி கொடை விழா..6ம் ஆண்டாக அன்னதானம் வழங்கல்.

 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயாமொழியில் அருள்மிகு ஸ்ரீ முப்புராதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கொடை விழா நடைபெறும். இந்த ஆண்டு கொடை விழா கடந்த திங்கள்கிழமை 11ம் தேதி தொடங்கியது. விழாவை ஒட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 

செவ்வாய்க்கிழமை இரவு அம்பாள் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இன்று புதன்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். விழாவை ஒட்டி அனைத்து சமுதாய மக்கள் சார்பில் ஆறாம் ஆண்டாக காலை சிற்றுண்டி அன்னதானம் வழங்கப்பட்டது. 

முப்புராதி அம்மன் அன்னதான குழு தலைவர் பத்மநாபன், செயலாளர் சுரேஷ், பொருளாளர் சேகர், ஆலோசகர்கள் ராஜலிங்கம், நாராயணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad