உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 44வது ஆண்டு விழா, சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா, மகா சபை கூட்டம் ஆகிய முப்பெரும் விழா புது மனை வடக்கு தெருவில் உள்ள சங்க இடத்தில் நடந்தது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவரும், உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவருமான ஆ.ரவி தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் கி. மந்திரம் வரவேற்றார். புதிய கட்டிடத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சௌந்தர்ராஜன் ஞான்ராஜ் கோயில் பிள்ளை, கந்தன், ராம்குமார், அமல்ராஜ், விஜயகுமார், ரஹ்மத்துல்லாஹ், சண்முகசுந்தரம், தர்மராஜ், ஸ்டாலின் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
தொடர்ந்து நடந்த ஆண்டு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், ஆறுமுகநேரி வியாபாரிகள் சங்க தலைவர் செந்தமிழ்ச்செல்வன், பரமன்குறிச்சி வர்த்தக சங்க செயலாளர் பொன்ராஜ், திருச்செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் துரைசிங், செயலாளர் கார்க்கி, பொருளாளர் இராதாகிருஷ்ணன், பரமன்குறிச்சி வர்த்தகர் சங்க தலைவர் லிங்கம், பொருளாளர் லெட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சங்க செயலாளர் வேல்ராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் சுந்தர் சங்க வரவு - செலவு கணக்கு வாசித்தார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் புதிதாக மண்டபம் அமைப்பதற்காக தொழிலதிபர் ஞானராஜ் கோவில் பிள்ளை ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். உடன்குடி சங்க துணைத் தலைவர் அமுதன் ஆண்ட்ரூஸ் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக