கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேம்பாலத்தில் பழங்கள் ஏற்றிச்சென்ற மினி லாரி மீது கனிமவள லாரி மோதி விபத்து. கனிமவள லாரி மோதியதில் பாலத்தை உடைத்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கிய மினி லாரியில் இருந்து ஓட்டுநர் பத்திரமாக மீட்பு
மதுரையிலிருந்து -திருவனந்தபுரத்திற்கு பழங்களை இறக்க வந்து கொண்டிந்த ஈச்சர் டெம்போ இன்று காலை குழித்துறை தாமிரபரணி ஆற்று பாலத்தின் மேல் வந்த போது, பின்னால் வந்த டாரஸ் லாரி, ஈச்சரின் பின்பக்கத்தில் மோதியதில், ஈச்சர் பாலத்தின் தடுப்பு வேலியை தாண்டி அந்தரத்தில் தொங்கியது. இதில் ஓட்டுநர் சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக