டேக்வாண்டோ போட்டியில் தங்க பதக்கம் வென்ற சி எஸ் ஐ சி எம் எம் பள்ளி மாணவி
நீலகிரி மாவட்டம் சி எஸ்ஐ சி எம் எம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு B பிரிவில் படித்து வரும் ஷபானா அம்ரின் 12 ஆகஸ்ட் 2025 அன்று கோத்தகிரியில் விஷ்வா சாந்தி மெட்ரிக் பள்ளியில் நடந்த மாவட்ட டேக்வாண்டோ போட்டியில் கலந்து தங்கப்பதக்கம் வென்று உள்ளார். இந்த போட்டி 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியாகும் இதில் 46 கிலோ கிராம் கேட்டகிரியில் கலந்து கொண்டார். ஷபானாவின் சிறப்பான திறமையும் மற்றும் கடின உழைப்பும் இதனை சாத்தியப்படுத்தியது. அவரின் சாதனையை பள்ளி காலை வழிபாட்டில் தலைமை ஆசிரியர்கள் உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மற்ற ஆசிரியர்கள் எல்லாரும் பாராட்டு தெரிவித்தனர். இந்தப் பள்ளி மாணவியின் சிறப்பு மிக்க பதக்கம் பள்ளிக்கு பெருமையை தேடி தந்துள்ளது மற்றும் மற்ற மாணவ மாணவிகளுக்கும் ஊக்கத்தினை அளித்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக