நண்பர்கள் டிரஸ்ட் வேலூர் மாவட்டம் சார்பில் 79 வது சுதந்திர தின நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாட்டம்!
வேலூர் , ஆகஸ்ட் 15 -
தன்யா மெடிக்கல் சென்டர் Dr. தனேஷ் பிரசாத் MBBS, MS., தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
வேலூர் மாவட்டம் இந்திய தேசத்தின் 79 வது சுதந்திர தின கொடி யேற்று விழா பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங் கும் நிகழ்ச்சி நண்பர்கள் டிரஸ்ட்டின் வேலூர் மாவட்ட தலைவர் முஹம்மத் ரபி தலைமையில் நடைப்பெற்றது.வேலூர் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தேசிய கொடியை தன்யா மெடிக்கல் சென்டர் Dr. தனேஷ் பிரசாத் MBBS, MS., அவர்கள் ஏற்றிவைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக் கும், பொதுமக்களுக்கும், இனிப்பு வழங் கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக