ஸ்ரீ சாந்தி விஜய் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 79 வது சுதந்திர தின விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

ஸ்ரீ சாந்தி விஜய் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 79 வது சுதந்திர தின விழா


நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ சாந்தி விஜய் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியின் தாளாளர் திரு. எஸ். மோத்திலால் கட்டாரியா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உதகை ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது .இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. R.அனிதா அவர்கள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. காமாட்சி அவர்கள் ஏற்பாட்டில் பள்ளியின் தாளாளர் திரு எஸ் . மோத்திலால் கட்டாரியா அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக தேசிய மாணவ மாணவர்களின் அணிவகுப்போடு நடைபெற்ற விழாவில் கொடி பாடல் பாடப்பட்ட மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் ஆசிரியைகளும் மாணவ மாணவிகளும் ,பெற்றோர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை மற்றும் அனைத்து துறை ஆசிரியைகள் சேர்ந்து மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் .மேலும் கலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு திரு. எஸ் .மோத்திலால் கட்டாரியா மற்றும் சிறப்பு விருந்தினர் திபேஷ் கட்டாரியா


 அவர்கள் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் திருமதி. ஜெய்சீலா  அவர்கள் தொகுத்து வழங்கினார். இறுதியாக அலெக்ஸாண்டர் பர்ணபாஸ் அவர்கள் நன்றியுரை வழங்கினார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத்குமார் .மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல்  இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad