கலைஞர் 7 ஆம் ஆண்டு நினைவு தினத் தை முன்னிட்டு நெமிலி கிழக்கு ஒன்றி யம் சார்பில் மலர் தூவி மரியாதை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

கலைஞர் 7 ஆம் ஆண்டு நினைவு தினத் தை முன்னிட்டு நெமிலி கிழக்கு ஒன்றி யம் சார்பில் மலர் தூவி மரியாதை !

கலைஞர் 7 ஆம் ஆண்டு நினைவு தினத் தை முன்னிட்டு நெமிலி கிழக்கு ஒன்றி யம் சார்பில் மலர் தூவி மரியாதை !

ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 7 -

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் தலைமையில் நெமிலி பேரூர் செயலாளர் G.ஜனார்த்தனன் அவர்கள் முன்னிலை யில் நெமிலி அண்ணா சாலையில் இருந்து கழகத்தினர் அமைதிப்பேரணி சென்று நெமிலி பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத் திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது.இதில், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், ஒன்றிய நிர்வாகிகள் புருஷோத்தமன், அப்துல் ரகுமான், பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் அப்துல் நசீர், பேரூராட்சி நிர்வாகிகள் சேகர், ஹரீஷ், ரோஷன், லட்சுமிபதி, சுஜய், தமிழ்செல்வன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad