தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு வருகின்ற 11ஆம் தேதி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்.
சிவகங்கை மாவட்டத்தில், 2024-2026 ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் (பண்ருட்டி தொகுதி) தலைமையில், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ச.அரவிந்த் ரமேஷ் அவர்கள் (சோழிங்கநல்லூர் தொகுதி), திரு.இரா.அருள் அவர்கள் (சேலம் மேற்கு தொகுதி), திரு.மு.சக்ரபாணி அவர்கள் (வானூர் தனித்தொகுதி), திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் (விருதுநகர் தொகுதி), திரு.கோ.தளபதி அவர்கள் (மதுரை வடக்கு தொகுதி), திரு.ஏ.நல்லதம்பி அவர்கள் ( திருப்பத்தூர் தொகுதி), திரு.மு.பூமிநாதன் அவர்கள் (மதுரை தெற்கு தொகுதி), திரு.ரா.மணி அவர்கள் (ஓமலூர் தொகுதி), திரு.எஸ். மாங்குடி அவர்கள் (காரைக்குடி தொகுதி), திரு.எம்.கே. மோகன் அவர்கள் (அண்ணா நகர் தொகுதி), திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் (பெருந்துறை தொகுதி) ஆகியோர்களுடன் வருகின்ற 11.8.2025 அன்று சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின்கீழ் நிறைவேற்றுப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்துத் துறை அரசு முதல்நிலை அலுவலர்களுடன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்ஆய்வுக் கூட்டமும் மேற்கொள்ளவுள்ளனர் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக