நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் நீதிமன்றத்தை அவமதித்த காரைக்குடி மாநகராட்சி ஆணையர் - மாமன்ற உறுப்பினர்கள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. திமுக மாமன்ற உறுப்பினரும், நகர செயலாளருமான குணசேகரன் அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை 24 நபர்களிடம் கையெழுத்து பெற்று கொண்டு வந்தார்கள். அந்த தீர்மானத்தின்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் 7-8-2025 அன்று நேர்மையான முறையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஆகஸ்ட் ஏழாம் தேதி வியாழக்கிழமையன்று ஆணையாளர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் வழங்கிய உத்தரவுப்படி 10.30 மணிக்கு அதிமுக உறுப்பினர்கள் 7 பேரும், சுயேட்சை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் ஜனநாயக முறைப்படியோ, நீதிமன்றம் வழங்கிய உத்தரவு படியோ இந்த நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
ஆணையாளர் அவர்கள் சரியாக 10:58 மணியளவில் போதிய கோரிக்கையில்லாத காரணத்தினால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது என்று கூறி நீதிமன்றத்தை அவமதிக்கின்ற வகையில், ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கின்ற வகையில் நடந்து கொண்டார்கள்.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த குணசேகரன் அவர்கள் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் கடத்தப்பட்டு இருக்கிறாரா அல்லது விலை போய் இருக்கிறாரா, உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. இருக்கிறாரா இல்லையா என்பதை காவல்துறை கண்டுபிடித்து உறுதிப்படுத்த வேண்டும், இல்லையென்றால் நான் இங்கு தான் இருக்கிறேன் என்று காரைக்குடி பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக