7வது ஆண்டு நினைவு அஞ்சலி
நாசரேத் ஆகஸ்ட்:7 நாசரேத் பேரூர் தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாசரேத் பேரூர் தி.மு.க கழக சார்பில், நாசரேத் கே.வி.கே சாமி சிலை மற்றும் பேரூர் கழக அலுவலகத்தில் வைத்து கலைஞர் ஏழாவது ஆண்டு நினைவாக கலைஞர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நாசரேத் பேரூர் கழக செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். நகர அவை தலைவர் கருத்தையா, நகர பொருளாளர் சுடலைமுத்து முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன் சிறப்புரையாற்றினார்.
நகர தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ராஜ்குமார் வார்டு செயலாளர் உடையார், மாற்கு தர்மகண், ஜெபகிருபை, சரவணன், இளங்கோ, மனோகரன் டேமின், ஒன்றிய பிரதிநிதி ஞானராஜ் ராமச்சந்திரன், தேவ், மனோகரன், மகளிர் அணி அமைப்பாளர் இந்திராணி, ஜெசி, சுயம்பு மற்றும் வார்டு பிரதிநிதி சேகர், கிருஷ்ணகுமார், ராபின், பரந்தாமன், நாராயணன், கிருஷ்ணமூர்த்தி, பாலா, திருமணி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக