ரூ.98.லட்சம் மதிப்பில் தார்சாலை பணி
நல்ல தம்பி எம். எல் .ஏ தொடங்கி வைத்தார்!
திருப்பத்தூர், ஆகஸ்ட் 12 -
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த எலவம்பட்டி ஊராட்சியில் வேல்முருகன் பகுதி வழியாக கொரட்டி சாலை இணை ப்பு வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டது. இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக மாறி உள்ளதால்
இந்த பகுதியில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.மேலும் சாலையை சிரமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
அதனால் கடந்த ஆண்டு 1 கிலோ மீட்டர் மட்டும் சாலை புதுப்பிக்கப்பட்டு பயன் பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.இந்த நிலையில் மீதமுள்ள 2 கிலோ மீட்டர் சாலையை புதுப்பிக்க முதல்- அமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு - நபார்டு திட்டம் சார்பில் ரூபாய் 98 லட்சம் நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டது.அதனை தொடர்ந்து நேற்று பணி தொடக்க நிகழ் ச்சி ஊராட்சி மன்ற தலைவர் மேனகாவி வேகானந்தன் தலைமையில் நடைபெற் றது. இதில் நல்லதம்பி கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார் முன் னதாக ஒன்றிய கழக செயலாளர் குண சேகரன் பொதுக்குழு உறுப்பினர் சு.அரசு, ஒன்றிய பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகப்பிரியாகமலநாதன் கழக முன் னோடிகள் வெங்கடப்பன், காளியப்பன், வெங்கடேசன், சங்கர், ரஜினி, பிரகாசம், விஜயபிரகாஷ், நாகராஜி, விஜயன், சசி பாண்டியன், குமரேசன், சுப்பிரமணி, ஆனந்தன், மதுமதி, அருட்செல்வி, பொறி யாளர் ராகவன், ஊராட்சி செயலர் ராஜேஷ் உட்பட பலர் கலந்த கொண்டனர்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக