சேந்தமங்கலம், ஆகஸ்ட் 21 -
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், அக்கியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குரு ராகவேந்திரா பிருந்தாவனத்தில் நேற்று காலை 9 மணிக்கு, குருவார வழிபாடு மற்றும் குருவுக்குரிய பூச நட்சத்திர வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
வழிபாட்டு நிகழ்ச்சியில் மூலவர் ஸ்ரீ குரு ராகவேந்திரருடன், பரிவார தெய்வங்களான லட்சுமி நரசிம்மர், விநாயகர், ராமர், சீதை, மகாலட்சுமி உள்ளிட்ட சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.
வழிபாட்டின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குருவுக்குரிய வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் இணைந்து வருவது மிகுந்த சிறப்புடைய நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் “குரு புஷ்ப யோக நாள்” என்றும் அழைக்கப்படுகிறது. இது அட்சய திருதியையை விடவும் சிறப்பான நாளாக பக்தர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக