சென்னை – ஆகஸ்ட் 19 (ஆவணி 3)
தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி, முன்னுரிமை அடிப்படையில் பணிநியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அப்ரண்டீஸ் தொழிற்சங்கம் (TNEBATU) சார்பில், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் பின்புறம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பல நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மின்வாரியத் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படாததால், ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்தபடியே அமர்ந்தனர். இதனை அடுத்து காவல்துறை தலையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக