ஆகஸ்ட் 19 உலகம் முழுவதும் உலக புகைப்பட தினம் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இது புகைப்பட கலையின் வரலாறு அறிவியல் மற்றும் கலைகளை கொண்டாடும் ஒரு நாள் 1839 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அரசாங்கம் தாக்குரோ டைப் செயல்முறையை அறிவித்ததன் நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகம் முழுவதும் உலகப் புகைப்பட நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் புகைப்படக் கலையின் பல்வேறு அம்சம்சங்களை கொண்டாடுகிறது புகைப்பட கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பகிர்ந்து கொள்ளவும் தங்கள் உலகத்தை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கிறது புகைப்படத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தையும் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் அங்கீகரிக்கிறது எனவே புகைப்பட வரலாற்றில் இந்த குறிப்பிடத்தக்க மைல்களை கௌரவிக்கும் வகையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலகப் புகைப்பட தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள புகைப்பட கலைஞர்கள் ஒன்றிணைந்து மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களுக்குள் கேக் வெட்டியும் மிகச் சிறப்பாக கொண்டாடினர். இந்நிகழ்வில் நீலகிரி மாவட்ட புகைப்பட மாவட்ட தலைவர் திரு. உமாசங்கர் அவர்களும் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத்குமார் .மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதளம் செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக