மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் மீது முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி கடும் விமர்சனம்!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 2 -
திருப்பத்தூர் மாவட்டம் திருபத்தூரில் நகர கழகம் சார்பில் வருகிற 13ஆம் தேதி எடப்பாடியார் வருகையொட்டி ஆலோச னை கூட்டம் நகர கழக செயலாளர் டி. டி. குமார் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட கழக செயலாளாரும், முன்னாள் அமைச்சருமான கே.சி. வீர மணி சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆலோசனை கூட்டத் தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி கடந்த தேர்தலில் தமிழக மக்க ளை தவிர்த்து ஸ்டாலின் மட்டுமே எடப் பாடியார் ஆட்சியை குற்றம்சாட்டி பல பொய்களை பேசி ஆட்சிக்கு வந்தார்எதிர் கட்சி தலைவராக இருந்தபோது தான் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பாலா றும், தேனாறும் ஓடும் என பேசிய மு.க. ஸ்டாலின் கடந்த 4ஆண்டுகளில் பொது மக்களுக்கு எந்தவொரு நல்லதும் செய்ய வில்லை எனவும் கடந்த எடப்பாடியார் ஆட்சியில் கனிமொழி மதுபானக்கடை களால் இளம் விதவைகள் அதிகமாகி வருகின்றனர்.திமுக ஆட்சிக்கு வந்தால் மதுபானக்கடைகள் மூடப்படும் என தெரி வித்த அவர் தற்போது கூட்டுறவு சக்கரை ஆலையை மூடிவிட்டு புதிய மதுபான ஆலையை திறந்து இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி கடும் விமர்சனம் செய்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பலரும் உள்ளனர்.
செய்தியாளர்
மோ அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக