பேஸ்புக்கில் வங்கி செயலி போன்று போலி செயலி மூலம் பணம் திருடும் கும்பல் உஷார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

பேஸ்புக்கில் வங்கி செயலி போன்று போலி செயலி மூலம் பணம் திருடும் கும்பல் உஷார்



திருப்பூரில் ஒரு நிறுவன ஊழியர் ஒருவருக்கு அவரின் பேஸ்புக் கணக்கில் YONO என்ற வங்கி செயலிAPP போன்று போலி செயலிAPP மூலம் இந்த ஊழியரை செல்போனில் தொடர்பு கொண்டு அவருடைய வங்கி கணக்கு மற்றும் அவருடைய விலாசம் உள்ளிட்ட பல விவரங்களை செல்போனில் சொல்லியுள்ளார் மேலும் அந்த ஊழியரிடம் உங்கள் வங்கி கணக்குகளை சரிபார்க்க வங்கி பெயரை குறிப்பிட்டு வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று சொல்லி உங்கள் எண்ணுக்கு ஓடிபி எண் வரும் அதை சொல்லுங்கள் என்று சொல்லி சொல்லி உள்ளார் அதனால் தன்னுடைய வங்கி கணக்கு உள்ள வங்கியின் செயலி என்று நம்பி அந்த ஊழியரும் ஓடிபி எண்ணை சொல்லியதும் ஊழியரின் வங்கி கணக்கிலிருந்து ஒரு லட்சம் பணத்தை உடனடியாக திருடன் 

எடுத்துவிட்டான் இதை அறிந்த ஊழியர் உடனடியாக அவர் இருக்கும் பகுதி காவல் நிலையத்தில்   புகார் செய்துள்ளார் மேலும் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிராம் அதிகாரிகளிடம் புகார் செய்தார் உடனடியாக சைபர் கிரைம் காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் ஊழியரின் பணத்தை திருடியவனின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்தபோது திருடனின் வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது மேலும் திருடன் ஓடிபி எண் கேட்கும் போது  ஏடிஎம் வாசலில் நின்று செல்போன் மூலம் ஓடிபி எண் கேட்பான் எனவும்  சொன்னவுடன் ஒரு நிமிடம் ஏடிஎம்மில் பணத்தை எடுத்து விடுவான் என்றும் சிறை சைபர் கிரை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர் பொதுமக்கள் facebook ல் உட்பட வலைதளங்களில் வரும் போலி வங்கி செயலிகளிகளிடம்  இருந்து பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் வங்கியின் செயலிகள் என்று சொல்லி  ஓடிபி கேட்டால் அவர்கள் தங்கள்  கணக்கு உள்ள வங்கிக்கு சென்று நேரடியாக விசாரிக்கவும் மேலும்  யாருக்கும் ஓடிபி எண் சொல்ல வேண்டாம் என்று  தமிழக குரல் இணையதள செய்தி தளம்  சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad